search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களுக்கு தற்காலிக தடை"

    • ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா.
    • திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் ஏழுமலையான் எழுந்திருளினார். இன்று இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. நாளை காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை நாளை நடக்கிறது. இந்த ஆண்டு கருட சேவை வழக்கத்தை விட 30 நிமிடம் முன்கூட்டியே அதாவது மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இரவு 11 மணி வரை மாட வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பல்வேறு நகை அலங்காரங்களுடன் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    கருட சேவையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதலே திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாளை திருப்பதி மலை மேல் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



    மாலை 6 மணி க்கு மேல் இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் திருப்பதியில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எந்தெந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்தலாம் என்பதை பக்தர்கள் அறிந்து கொள்ள கியூஆர் கோடு வசதியுடன் கூடிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் சென்னை மற்றும் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருட சேவையொட்டி ஆந்திர மாநில போக்குவரத்து சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது தவிர மாட வீதியில் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்தும் நின்றபடியும் கருட சேவை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் மாடவீதிகளில் உள்ள கேலரிகளுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு வர வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    மேலும் கூடுதல் இடங்களில் அன்னதானம் பால் போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று காலையில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டதால் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் 39 வாகனங்களை இயக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
    விருதுநகர்:

    பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படு கிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தும் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளின் 206 வாகனங்களில் 169 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளின் 174 வாகனங்களில் 138 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளை சேர்ந்த 307 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வு பணியை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தார். வாகனங்களின் அவசர கால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா போன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:- பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 73 பள்ளி வாகனங்கள் தகுதிச்சான்று புதுப்பிக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கூறினார்.

    மேலும் சென்ற ஆண்டில் எந்த ஒரு விபத்தில்லாமல் பணியாற்றிய பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி விபத்தில்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து செயல்பட பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை அறிவுறுத்தினார்.

    பின்னர் தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள தீயணைப்புக்கருவிகளை அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்காத 39 வாகனங்களை இயக்க தற்காலிக தடை விதித்தார்.

    தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்களின் குறைபாடுகள் சரி செய்யப்பட்டவுடன் இயக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சந்திரசேகரன்(விருதுநகர்), ரவிச்சந்திரன்(ஸ்ரீவில்லிபுத்தூர்), வாகன ஆய்வாளர் இளங்கோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×